உயிரினும் மேலான... தோழியே,
ஒவ்வொரு இரவும் உன் குறுஞ்செய்தி
வரவுக்காக காத்திருக்கிறது என் செல்பேசி (நானல்ல)
குறுஞ்செய்தி வரவுக்கு பின்
குறு குறுக்கும் பார்வையுடன்
நோக்கின்றன என் கண்கள் (நானல்ல)
செய்தியின் அகம் கண்டு
நகைக்கின்றன, என் உதடுகள் (நானல்ல)
பதில் செய்தி அனுப்ப சொல்லி
என் விரல் பார்த்து நகைக்கின்றன
செல்பேசியின் பொத்தான்கள் (நானல்ல)
நம்பிவிடாதே என் பதில் செய்திகளை....,
எல்லாம் என் செல்பேசியின் லீலை ....
நம்பிவிடாதே (நானல்ல)
பாரதி "நான் நம்பிவிட்டேன்".
பதிலளிநீக்குநன்றி ஆசிரியரே உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.....
பதிலளிநீக்கு