திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில்!!

விழிகளோ பொறு பொறு என்கிறது
இதழ்களோ எடு எடு என்கிறது
பொறுப்பதா எடுப்பதா ஏனடி போடுகிறாய் புதிரை
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கால் சலங்கை சலசலக்கிறது
கை வளையல் கலகலக்கிறது
உதடுகள் மட்டும் உதிர்க்க மறுக்கிறதே ஏன் ?
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கண்ணோடு கண் பேசி அறிந்த உண்மையை
மூச்சுகாற்றின் அலைகளில் அறிந்த உண்மையை
ஒரு முறையாவது உன் அசைத்து சொல்லிவிடு
ஏனெனில்,
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கண்களால் கவிதை சொல்லும் நீ
காற்றினில் இசை அனுப்பும் நீ
ஏனடி,
உதடுகளால் உண்மையை உதிர்க்க மறுக்கிறாய்..
விரைவில்,
உன் மௌனகீதத்தை மறிக்க செய்து
உதடுகள் வழியே உண்மையை ஜனிக்க செய்திடு....
ஏனெனில்,
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில்!!

3 கருத்துகள்:

  1. அருமையான கவிதை அன்பரே. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாலா உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  3. இதழ்கள் உதிர்க்காததன் தவிப்பும் அழகு தான் பாரதி செல்வன். உங்கள் கவிதை அழகு.

    பதிலளிநீக்கு

Bookmark and Share