வெள்ளி, 1 ஜூலை, 2016

கடலும் கழிவும்

கடல் பயணத்தின் போது
நுரைத்து தெறிக்கும் தண்ணீரெல்லாம்
மனித இனத்திடமிருந்து பெற்ற கழிவுகளுக்காய் கடல்
காரி உமிழ்வதாய் உணர்கிறேன்

புதன், 31 மார்ச், 2010

யார் கூற தகும்...

உன் புகைப்படம்
என் பொழுதுபோக்கி
அது தான் என்னை
நகைக்கவும் செய்கிறது
கரையவும் செய்கிறது...
உன்னிடம் சொல்ல நினைத்ததை எல்லாம்..
உன் புகைப்படத்திடம் சொல்லிவிட்டேன்...
இனி,
யார் கூற தகும்...
இது ஒருதலை காதலென்று...

வியாழன், 11 பிப்ரவரி, 2010

காதல் தான்...

உனக்கு அறியாமல்
உன்னை ரசிப்பது
ஊர் முன்னிலையில்
பேச்சை குறைப்பது
காரணமே இல்லால்
பேச விழைவது..
நின் கண்களை நோக்கிய பின்
வார்த்தை வர மறுப்பது.....
இவை அனைத்தும்...
காதலின் அறிகுறி என்றால்...... ???
உன் மீதான என் உணர்வும்..
காதல் தான்......
Bookmark and Share